என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மஹிமா நம்பியார்
நீங்கள் தேடியது "மஹிமா நம்பியார்"
சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா - மஹிமா நம்பியார், இந்துஜா நடிப்பில் உருவாகி வந்த ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. #MagaMuni #Arya #MahimaNambiar #Indhuja
`கஜினிகாந்த்' படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் அடுத்ததாக படங்கள் வெளிவரவில்லை. கடந்த மார்ச் மாதம் சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால், சாயிஷாவுடன் இணைந்து `காப்பான்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இதுதவிர சாந்தகுமார் இயக்கத்தில் ‘மகாமுனி’ மற்றும் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் `டெடி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்கிறது.
இதில் ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
It’s a wrap for #Magamuni 💪💪 Beautiful beautiful Working experience with the Master story Teller #Santhakumar sir 🤗🤗😘😘 Hope I have done justice to what you have conceived in ur head for 7 long years 🤗 Thank you @kegvraja@StudioGreen2 for this great opportunity 💪💪😘 pic.twitter.com/3jSMb5Lt4Y
— Arya (@arya_offl) April 23, 2019
மகாமுனி படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மௌன குரு படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கியிருக்கும் இந்த படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.
அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். #MagaMuni #Arya #MahimaNambiar #Indhuja
ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஐங்கரன்' படத்தின் முன்னோட்டம். #Ayngaran #GVPrakashKumar #MahimaNambiyar
காமன்மேன் பிரசன்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’.
‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
ஔிப்பதிவு - சரவணன் அபிமன்யு, இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், படத்தொகுப்பு - ஏ.எம்.ராஜா முகமது, கலை - ஜி.துரைராஜ், பாடல்கள் - ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக், நடனம் - ராஜு சுந்தரம், ஷோபி ஆக்ஷன் - ராஜசேகர், கதை, திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் - ரவி அரசு.
முன்னதாக வெளியான படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் இந்த மாத ரிலீசாக வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Ayngaran #GVPrakashKumar #MahimaNambiyar
ஐங்கரன் டீசர்:
‘மௌன குரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா பூஜையுடன் இன்று துவங்கியது. #MagaMuni #Arya #Indhuja #MahimaNambiar
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படம் ‘மகாமுனி’.
ஆர்யா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார், இந்துஜா நடிக்கின்றனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
மௌன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்குகிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், க்ரைம் திரில்லர் பாணியில் ‘மகாமுனி’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
SG next, #MagaMuni started with Pooja today with @arya_offl.
— Studio Green (@StudioGreen2) November 14, 2018
Directed by #SanthaKumar (Mounaguru Fame)
Produced by @kegvraja@StudioGreen2@Actress_Indhuja@Mahima_Nambiar@MusicThaman#ArunPadmanabhan@editorsabu@proyuvraajpic.twitter.com/JfDpOK8JLq
அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.
இந்த படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடந்தது. விழாவில் படக்குழுவினருடன் நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குநர்கள் எம்.ராஜேஷ், சந்தோஷ் பி.ஜெயக்குமார், ஹரிகுமார் (தேள்), தயாரிப்பாளர்கள் 2டி என்டெர்டெயின்மென்ட் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், சக்திவேலன்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #MagaMuni #Arya #Indhuja #MahimaNambiar
மு.முாறன் இயக்கத்தில் அருள்நிதி - மஹிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் விமர்சனம். #IravukkuAayiramKangal #Arulnidhi
இரவில் மர்மமான முறையில் கொலை நடக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதி வழியாக வரும் அருள்நிதியை போலீசார் கைது செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொருவரும் கைது செய்யப்படுகிறார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துகின்றனர். இதில் அருள்நிதியை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.
அதேவேளையில், இன்னொரு புறத்தில் கைது செய்யப்பட்ட நபர் கொலை நடந்த வீட்டில் இருந்து, அருள்நிதி தான் வெளியே வந்ததாக கூறுகிறார். இதையடுத்து அருள்நிதியை கைது செய்ய போலீசார் முடிவு செய்கின்றனர். ஆனால் அருள்நிதி போலீஸாரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறார்.
பின்னர் நடந்தது பற்றி அருள்நிதி யோசிக்க, பிளாஸ்பேக் செல்கிறது. கால் டாக்சி டிரைவரான அருள்நிதியும், நர்ஸ் வேலை பார்க்கும் மஹிமாவும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒருநாள் இரவில் மஹமாவை சிலர் கிண்டல் செய்கின்றனர். அவர்களிடமிருந்து மஹிமாவை, அஜ்மல் காப்பாற்றி அனுப்புகிறார்.
பின்னர் மீண்டும் அஜ்மலை சந்திக்கும் மஹிமா, தன்னை காப்பாற்றியதற்கு நன்றி கூற, அஜ்மல் அவளை அடைய நினைத்து, தவறாக பேசுகிறார். இதையடுத்து அஜ்மலை அடித்து விட்டு மஹிமா அங்கிருந்து சென்றுவிடுகிறாள். தொடர்ந்து அஜ்மல், மஹிமாவை தொந்தரவு செய்ய, அதனை தனது காதலரான அருள்நிதியிடம் மஹிமா கூறுகிறாள். அப்போது, கடலில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சிக்கும் சாயா சிங்கை அருள்நிதி காப்பாற்றுகிறார்.
சாயா சிங், அஜ்மல் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், வீடியோ ஒன்றை வைத்து மிரட்டுவதாகவும் கூற, அஜ்மலுக்கு முடிவு கட்ட நினைக்கிறார் அருள்நிதி. இதையடுத்து அஜ்மல் வீட்டிற்கு செல்லும் அருள்நிதி, அங்கு சுஜா வருணி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சயடைகிறார். பின்னர் போலீஸ் தன்னை கைது செய்ததும், தான் தப்பித்ததும் அவருக்கு நினைவுக்கு வருகிறது.
கடைசியில் சுஜா வருணியை கொலையை செய்தது யார்? சுஜா வருணிக்கும், அஜ்மலுக்கும் என்ன சம்பந்தம்? அந்த கொலையில் இருக்கும் மர்மம் என்ன? போலீசிடம் இருந்த தப்பித்த அருள்நிதி கொலையாளியை கண்டுபிடித்தாரா? கொலைக்கு நடுவே சந்தேகப்படும் அந்த ஆயிரம் கண்கள் தான் படத்தின் மீதிக்கதை.
மஹமா நம்பியாருடன் காதல் காட்சிகளில் அருள்நிதி எதார்த்தமாக, அழகாக நடித்திருக்கிறார். அதேநேரத்தில் தனது காதலிக்கான பிரச்சனையை எதிர்கொள்ளும் போது, பரபரப்பான சூழலில் கோபம் கலந்த தேடலிலுடனும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். மஹமா நம்பியார் திரையில் அழகு தேவதையாக வந்து கவர்கிறார். அவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சாயா சிங் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அஜ்மல் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். மற்றபடி சுஜா வருணி, வித்யா பிரதீப், ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
இரவில் நடக்கும் ஒரு கொலை, அந்த கொலையில் சம்பந்தப்படாத ஒரு சாதாரண மனிதன் ஒருவன் சிக்குகிறான். அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர, அதில் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறான். அதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். அதேநேரத்தில் அதில் பல முடிச்சுகள் இருக்க, அதனை அவன் எப்படி எதிர் கொண்டான். அந்த கொலையில் சம்பந்தப்பட்டவனை கண்டுபிடித்தானா என்பதை த்ரில்லிங்கான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மு.மாறன். படத்தின் கதையில் விறுவிறுப்பு இருந்தாலும், திரைக்கதையின் வேகத்தில் தொடர்ந்து பல டுவிஸ்டுகள் வருவது ரசிகர்களுக்கு குழப்புத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் இரவை வெளிச்சம்போட்டு காட்டுப்படியாக இருக்கிறது.
மொத்தத்தில் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' கவனம் தேவை. #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal
மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி - மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் முன்னோட்டம். #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal
`ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கும் படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்'.
மு.மாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - சாம்.சி.எஸ், பாடல்கள் - சாம்.சி.எஸ், கலை - என்.கே.ராகுல், ஸ்டன்ட் - கணேஷ் குமார், எடிட்டிங் - சான் லோகேஷ், தயாரிப்பு - டில்லி பாபு, எழுத்து, இயக்கம் - மு.மாறன்.
ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதையை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.
படத்தில் நடித்த அனுபவம் பற்றி படத்தின் நாயகன் அருள்நிதி கூறும்போது,
கால்டாக்சி டிரைவர் ஒருவர் பிரச்சினையில் மாட்டுகிறார். அதிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்பது தான் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் கதை. இதில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் இருக்கும். பாடல்களும் யதார்த்தமாக இருக்கும். சினிமாத் தனமாக எதையும் செய்யவில்லை. தலைப்புக்கு ஏற்ப இரவு நேரத்தில் அதிகமாக படமாக்கினோம்.
இது நாம் அடிக்கடி கேள்விப்படும் சம்பவங்களை சேர்த்து விறுவிறுப்பாக, மு.மாறன் இதை இயக்கி இருக்கிறார். ஒருநாள் இரவில் நடக்கும் கதை. ஆக்ஷன் திரில்லராக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் அஜ்மல் பாத்திரம் பேசப்படும். அவருக்கும் எனக்கும் ஒரு சண்டை காட்சி இருக்கிறது. அதை மிகவும் ரசித்து கஷ்டப்பட்டு நடித்தோம். நாயகி மகிமா நம்பியார் நர்சாக வருகிறார். படத்தின் காட்சிகளும், வசனங்களும் அருமையாக அமைந்துள்ளன.
படம் வருகிற 11-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X